தமிழ்நாடு

யோகாவில் அசத்திய ஆறாம் வகுப்பு சிறுமி.....

யோகாசனத்தில் மிக சிரமமான விருட்சிகாசனத்தை தொடர்ந்து நான்கு நிமிடம் 47 விநாடிகள் செய்து கோவையை சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த தன்ஞ்ஜெயன் - ஜெயந்தி தம்பதியரின் மகள் நேகா. இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு குழந்தையாக இருக்கும் போதே யோகாசனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் அதற்கான பயிற்சியை மேற்க்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் விருட்சிகாசானத்தில் உலக சாதனை புரிய விரும்பிய சிறுமி நேகா, கடந்த ஆறு மாதங்களாக  அதற்கான சிறப்பு பயிற்சி பெற்று வந்தார். அதனை தொடர்ந்து இன்று கோவை நீலம்பூர் பகுதியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிறுமி நேகா யோகாசனத்தில் மிக சிரமமான விருட்சிகாசானத்தை தொடர்ந்து நான்கு நிமிடம் 47 விநாடிகள் செய்து சாதனை புரிந்தார்.

ஏற்கனவே விருட்சிகாசானத்தில் இரண்டு நிமிடம் பதினான்கு நொடிகள் சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு மேல் செய்த இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.