தமிழ்நாடு

ஓடும் ரயிலில் குடும்பத்தார் கண் முன்னே மாரடைப்பால் பயணி மரணம்..!

காட்பாடி - அரக்கோணம் இடையே ஓடும் ரயிலில் குடும்பத்தார் கண் முன்னே பயணி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tamil Selvi Selvakumar

அன்சாரி என்பவர் தனது குடும்பத்துடன் வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து ஹத்தியா செல்ல ஆலப்புழா தன்பாத் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், ரயில் அரக்கோணம் வருவதற்கு முன்பு அன்சாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் டிக்கெட் பரிசோதகரிடம் கொடுத்த தகவலையடுத்து, உடனடியாக அவர் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் ரயில் அரக்கோணம் வந்தவுடன் அங்கிருந்த மருத்துவர்கள் அன்சாரியை பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.