டிக்டாக் செயலியில் டபுள் மீனிங் வசனம் மற்றும் அடல்ட் பாடல்களுக்கு வீடியோ செய்து பிரபலமானவர் இலக்கியா. டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வந்தார்.
இவரின் இந்த கவர்ச்சியான தோற்றம் இவரை மேலும் பிரபலமாக்கியது.
“நீ சுடத்தான் வந்தியா” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் பல காரணங்களால் இப்படம் வெளியாகாமல் போனது. நடிகையான பிறகும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாகவீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
“நான் மூன்றாவது படிக்கும் போதே என் அம்மா இறந்து விட்டார்கள். அதன் பிறகு என்னை என் அப்பா பார்த்துக்கொண்டார். ஆனால், நான் எட்டாவது படிக்கும் போது என் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாததால், நான் ஒரு பஞ்சு மில்லில் வேலை செய்தேன். அப்போது எனக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைத்தது” என ஒரு பேட்டி ஒன்றில் மனமுருக பேசியிருப்பார்.
இந்நிலையில் இவர் “ என் சாவுக்கு காரணம் திலீப் சுப்பராயன் தான் என இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்து விட்டு, அளவு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டதாக் தெரிகிறது.
இந்த திலீப் சுப்பராயன் தமிழ் திரையுலகின் பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் மகன் ஆவார்.
தற்போது இவரும் சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறார். 'சுந்தரபாண்டியன்', 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'ஜில்லா', 'புலி', 'தெறி', 'வாரிசு', 'கோட்' 'விஸ்வாசம்', 'காப்பான்', 'தீரன்', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்
“இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் சாவுக்கு திலீப் சுப்பராயன் மட்டும்தான் கரணம். 6 வருஷமா அவன்கூட மட்டும்தான் இருக்கேன். நெறைய பொண்ணுங்க கூட பழக்கம் இருக்கு. அதை நான் தட்டி கேட்டா என்ன அடி அடினு போட்டு அடிப்பான். நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன் என்னால முடியல” என இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது இலக்கியா கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.