தமிழ்நாடு

நுரை பொங்கி வரும் தண்ணீரால் விவசாயிகள் கவலை

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் நுரை பொங்கி எழுவது தொடர் கதையாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

Malaimurasu Seithigal TV

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் நுரை பொங்கி எழுவது தொடர் கதையாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு, கர்நாடகா மற்றும் ஒசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வினாடிக்கு 828 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44 புள்ளி 28 அடியில், தற்போது 41 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 828 கனஅடி தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் தண்ணீரில் நுரை பொங்கி, திரண்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரில் அதிகளவிலான ரசாயனங்கள் கலப்பதால், தண்ணீர் மிகவும் மாசடைந்து காணப்படுகிரது. இதனால் தண்ணீரில் நுரை பொங்கி வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த நீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள், பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுகுறித்து விளக்கமோ, அல்லது எவ்வித நடவடிக்கையோ எடுக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.