கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.