தமிழ்நாடு

முதன் முறையாக விமானத்தில் நடக்க இருக்கும் ‘ஃபேஷன் ஷோ’...

இந்தியன் மீடியா ஓர்க்ஸ் நிறுவனத்தின் 5 வது ஆண்டுவிழாவை ஒட்டி பிரம்மாண்டமாக விமானத்தில் ஃபேஷன் ஷோ நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

சென்னை | செய்தியாளர்களிடம் பேசிய ஜான் அமலன்,  சென்னையில் விரைவில் விமானத்திலேயே ஃபேஷன் ஷோ நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறினார். கொரோனா காலத்தில் கப்பலில் வெற்றிகரமாக ஃபேஷன் ஷோ நடத்தியதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிலேயே விமானத்தில் நடத்தப்பட உள்ள இந்த பேஷன் ஷோ, பேஷன் உலகில் மட்டுமின்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

துபாய்,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சர்வதேச அளவிலான அழகிப்போட்டி, விருதுகள்  நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார். வரும் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை புதிய உத்திகளோடு மக்களை கவரும் வகையில் நடத்த இருப்பதாகவும், சமூகத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாகவும்ஜான் அமலன் தெரிவித்தார். 

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துக்கு உறுதுணையாக் இருந்து வரும் தொழில் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சினிமா, தொலைக்காட்சி மற்றும் தொழில் துறையை சார்ந்த ஏராளமான பிரபலங்கள், பிரமுகர்கள்  கலந்துகொண்டு இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத் தலைவர் ஜான் அமலனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.