தமிழ்நாடு

டாஸ்மாக்கில் மகனை அருகில் வைத்து மது அருந்தும் தந்தை... வைரலாகிவரும் வீடியோ...

காரைக்குடியில் அனுமதி பெற்ற அரசு மதுபான கூடத்தில் மகனை அருகில் வைத்து கொண்டு மது அருந்தும் தந்தை -  வைரலாகி வரும் வீடியோவால் பரபரப்பு.

Malaimurasu Seithigal TV

கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளில் அருகில் மது அருந்தும் பார்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை ரோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மது அருந்தும் பாரில் எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனை அழைத்து வந்து அருகில் அமரவைத்து தந்தை மற்றும் நண்பர்களுடன்  மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிறுவர்களுக்கு மதுபானம் விற்கவே அனுமதி இல்லாத சூழ்நிலையில் சிறுவனை பாரில் அமரவைத்து குடிக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மது அருந்தும்  பாருக்குள் சிறுவனை  அனுமதித்திருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாரின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.