தமிழ்நாடு

தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் திமுக-வினா் கள்ள ஓட்டுகள் பதிவு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காவல்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க ராணுவத்தை அழைக்கும் நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது என எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

Malaimurasu Seithigal TV

சேலம் மாவட்டம் ஓமலூாில் செய்தியாளா்களிடம்  பேசிய எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி,

நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சி  தோ்தலில்  திமுக-வினா் தேல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளனா் என்றார். மேலும் திமுக-வினா் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை கூட காவல்துறையினா் தடுத்து  நிறுத்தவில்லை எனவும்  தி.மு.க வேட்பாளரின் கணவர் ஒருவர் போலீசாரை மிரட்டும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. எனவும் குற்றம்சாட்டினார்.  தொடர்ந்து பேசிய அவர் பொதுமக்கள், அச்சமின்றி வாக்களிக்கும் சூழல் இல்லாத நிலையே தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என  குற்றம்சாட்டினா்.

மேலும், இது போன்ற  தேர்தல் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.