திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த சின்ன களக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரதீப். இவருடைய மனைவி வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி செலுத்தியவுடன் வனிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி விழுந்தாகவும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து செவிலியர் மணிமாலா, வனிதாவிற்கு ஏற்கனவே ஒவ்வாமை ஏற்பட்ட ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மீண்டும் மயக்கமான வனிதாவை ஆபாய கட்டத்தில் இருப்பதாக கூறி எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தநிலையில் செவிலியரை தற்காலிக பண் இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.