தமிழ்நாடு

மதுரை மேலூர் அருகே பரபரப்பு... ஊழியர்களின் போராட்டத்தின்போது தீவிபத்து...

போராட்டத்தின் போது தீவிபத்து ஏற்பட்டதால் பதற்றம்.

Malaimurasu Seithigal TV

மேலூர் அருகே தனியார் ரப்பர் தொழிற்சாலை ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு கேட்டு, கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பணிக்கு வராதவர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்த நிலையில், பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், திடீரென தொழிற்சாலை வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.