தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ட்விட்டரின் க்ரே டிக் பெற்ற முதல் தலைவர்....!!

Malaimurasu Seithigal TV

ட்விட்டரில் க்ரே டிக்(Grey Tick) யை நாடாளுமன்ற உறுப்பினர் திமுக கனிமொழி கருணாநிதி பெற்றுள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் தலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் சொந்த ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்துள்ளது.  சமீபத்தில் ட்விட்டர் இந்த முறையை மாற்றி நீலம் நிறம் நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கும், சாம்பல் ( கிரே) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார்/ பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. 

இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ட்விட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது ட்விட்டர்.  தமிழ்நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறுவனக் குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகியுள்ளார்.