தமிழ்நாடு

சிந்தாதிரிப்பேட்டையில் மீன்களின் விலை பன்மடங்கு உயர்வு.. அசைவ பிரியர்கள் கவலை.. என்ன காரணம்?

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

Suaif Arsath

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை பன்மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி, கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் நாட்டு படகுகளில் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே , சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில், மீன்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் மீன்களை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.