தமிழ்நாடு

மழை காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்...

தற்போதைய வடகிழக்கு பருவமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு போகாமல் இருக்கின்றனர்.

Malaimurasu Seithigal TV

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பலத்த காற்று காரணமாக தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் தூத்தூர் மற்றும் இனையம் மண்டலங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு.மேலும் கடலுக்கு சென்ற படகுகள் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்து வருகிறது மேலும் கடற்பரப்பிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் தேங்காய்யபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தூத்தூர் மற்றும் இணையம் மண்டலங்களை சேர்ந்த நாட்டு படகு மீனவர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனால் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளை மீனவர்கள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளதில் 200 க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் மீதமுள்ள படகுகள் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது.