தமிழ்நாடு

இழுவை வலையை தடை செய்யக்கோரி நடுக்கடலில் மீனவர்கள் போராட்டம்...

கடல் வளத்தை அழிக்கும் இழுவை வலையை தடை செய்யக்கோரி  கடலூர் மாவட்டத்ததை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள்  நடுக்கடலில் போராட்டத்தல் ஈடுபட்டனர். 

Malaimurasu Seithigal TV
கடல் வளத்தை அழிக்கும் இழுவை வலை மற்றும் அதிக திறன் கொண்ட படகுகளை வைத்து மீன்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடை செய்யக்கோரியும் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மீனவர்கள் படகுகளில் கறுப்பு கொடி கட்டி நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.