தமிழ்நாடு

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்...!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. 

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்குக் கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் என மொத்தம் 61 நாட்கள் மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.