தமிழ்நாடு

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க எங்கள் கொள்கையை பின்பற்றுங்கள்..! ஸ்டாலினுக்கு எடப்பாடி அறிவுரை.! 

Malaimurasu Seithigal TV

இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற அதிமுக அரசின் தொழிற்கொள்கையை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற, அதிமுக அரசின் தொழிற்கொள்கையை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் இரு சக்கர வாகன தொழிற்சாலையை 50 நாட்களில்‌ கொண்டு வந்தது போன்ற மாயையை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். 

மேலும்ஓலா நிறுவனத்தை திமுக அரசு கொண்டு வந்ததைப் போல் மாயையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்ததைப் போல் பேசி வருவதாகவும்  எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். .