தமிழ்நாடு

"காலாவதியான உணவு பொருட்கள்" கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

ஆண்டிபட்டி பகுதியில், காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Malaimurasu Seithigal TV

தமிழகம் முழுவதிலும் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது  குறித்து ஆய்வு செய்ய மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

அதன்  பேரில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள்,  சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு, அபராதம் மற்றும் நோட்டீஸ் வழங்கினர். அத்துடன், தொடர்ந்து இது போன்று விதி மீறலில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.