cyber threat  
தமிழ்நாடு

நாட்டையே அலற விடும் வெடிகுண்டு மிரட்டல்கள்…!! 2 ஆண்டுகளாக இமெயில் மூலம் போக்கு காட்டும் விஷமிகள்..!

outlook மற்றும் hotmail மூலமாக பல பெயர்களில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக போலீசார் தகவல் ...

மாலை முரசு செய்தி குழு

வெடிகுண்டு மிரட்டல் என்ற ஒரு வார்த்தை முன்னதாக நாட்டையே அலறவைக்கும் வகையில் அமைந்தது. ஆனால் சமீப காலமாக தினந்தோறும் வரக்கூடிய வெடிகுண்டு மிரட்டலால் சர்வசாதாரணமாக கடந்து செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம், அடுத்தடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடும் அரங்கேறி வருகிறது. முதலில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் தற்போது சர்வசாதாரணமாக நடந்தேறி வருகிறது. 

அதுவும் outlook, hotmail உள்ளிட்ட பல்வேறு இமெயில்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பெயர்களில் இருந்து தொடர்ச்சியாக வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், முதல்வர் வீடு, நீதிமன்றங்கள், நடிகர்கள் வீடு, அமைச்சரின் வீடு, டிஜிபி அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினந்தோறும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் 200க்கும் மேற்பட்ட முறை outlook மற்றும் hotmail மூலமாக பல பெயர்களில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதுவும் 10 மாநிலங்களில் தொடர்ந்து அந்த இமெயில்களில் இருந்து மட்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விபிஎன் பயன்படுத்தி டார்க் வெப் மூலம் விஷமிகள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் போலீசார் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் சைபர் கிரைம் மூலமாக குறிப்பிட்ட மெயில் ஐடியை டிராக் செய்யும் போது, ஒரு ஒரு செகண்டில் வேறு வேறு நாட்டில் லொக்கேஷன் மாறுவதால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனால் மத்திய உள்துறை மூலமாக சம்பந்தப்பட்ட மெயில் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியபோதும், முறையான பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தினந்தோறும் மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருவதால் சைபர் கிரைம் போலீசார், அந்தந்த காவல் நிலைய போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்குகளை பிரித்து விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.