தமிழ்நாடு

வரலாற்றில் முதன்முறையாக : 1ம் வகுப்பில் சேர 60 ஆயிரம் விண்ணப்பம் - தொடக்கக்கல்வி இயக்குனர் தகவல்

Malaimurasu Seithigal TV

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறைஅரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000 மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின் தான் மாணவர் சேர்க்கை தொடங்கும். முன்கூட்டியே தொடங்கிய நிலையிலும் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கையை கொண்டாட்டம் நடத்த கடந்த 17ம் தேதி கொளத்தூர் தொகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

அதன்படி இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்

இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கி இருப்பதால் வழக்கமாக சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்தாண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களை சேர்ப்பதற்கு என கால அவகாசம் இல்லை, ஆகஸ்ட் மாதம் வரை  மாணவர் வந்தாலும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் வரை மாணவர் சேர்க்கை சராசரியாக இருக்கும். என தொடக்கக்கல்வி இயக்குனர்  தெரிவித்தார்.