தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கலக்கம் வெற்றி பெற்ற நிலையில் திமுக அடுத்த நிலை வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில் எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், மூத்த தலைவர்களான எஸ். பி வேலுமணி மாற்று சி.வி சண்முகம் தரப்பில் ஒரு அணியும் என அதிமுக இரண்டாக பிரிந்தது. இதில் எஸ். பி வேலுமணி தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். என இந்த பிரச்சனை பெரியதாகி எடப்பாடி எஸ்.பி வேலுமணி தரப்பினரின் கட்சி பதவிகளை பறித்து உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து மாறி மாறி இரு தரப்பினரும் சட்டமன்ற சபா நாயகர் ஜே.சி.டி பிரபாகரன் இடம் தனித்தனியா தங்கள் அணியை சேர்ந்தவர்களை கொறடாவாக நியமிக்க சொல்லு மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் வேலுமணி அணியை சேர்ந்த 6 எம்.எல். ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் இரு தரப்பினரும் நிலைமை மோசமடைவதை தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினரும் சமரசம் பேசி ஒன்றிணைந்தனர். அதனை தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விஜய்க்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் வழங்கினர்.
இந்நிலையில் அதிமுகவின் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அதிமுகவை சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தில் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் ஆனந்தை சந்தித்து இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன், எம்.சி சம்பத், என். ஆர் சிவபதி மற்றும் கடம்பூர் ராஜா ஆகியோரும் இணைந்துள்ளனர்.
மேலும் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, சங்ககிரி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மான்ராஜ், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது மாநில அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இணைப்பு அதிமுகவின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும், என்பதும் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் இந்த இணைப்பு, தமிழக வெற்றி கழகத்தை மாநில அரசியலில் மேலும் வலுவான சக்தியாக மாற்றும் வாய்ப்புள்ளது. ஆனால் அதே போல தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு கட்சியில் மூக்கையா பதவிகள் கொடுக்க வேண்டிய ஒரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுத்தாலும் அத்தனை தவெக நிர்வாகிகள் மூலமானதுடன் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் இதனை முதலமைச்சர் விஜய் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.