எழும்பூர் 6-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றுபவர் மதுரவல்லி. இவர் தனது மேஜை மீது வைத்திருந்த தேதி முத்திரையை காணவில்லை என்ற உடனே நீதிமன்றத்தின் கேமராவை ஆய்வு செய்துள்ளார்.
அதில் நபர் ஒருவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்து முத்திரையை திருடி செல்வது தெரிந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சைதாப்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் எழும்பூர் நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. நீதிமன்றத்திற்குள் புகுந்து தேதி முத்திரையை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.