தமிழ்நாடு

முன்னாள் ஐ.ஜி. மகன் மைக்கேல் அருள் கைது

சென்னையில் முன்னாள் ஐ.ஜி.அருள்  மகன் மைக்கேல் அருளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Malaimurasu Seithigal TV

சென்னையில் முன்னாள் ஐ.ஜி.அருள்  மகன் மைக்கேல் அருளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தமிழக முன்னாள் போலீஸ் ஐ.ஜி. அருள்  மகன் மைக்கேல் அருள், தமது  மனைவியும் பத்திரிகையாளருமான ஜெனிஃபரை விவாகரத்து செய்துள்ளார். இதனால் அவருக்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சம் தொகை 2 கோடியே 60 லட்ச ரூபாயை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை கொடுக்கத் தவறியதால், மைக்கேல் அருளை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மைக்கேல் அருளை கைது செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.