“மக்கள் பணியே மகேசன் பணி” என தலைவர்கள் எல்லாம் அள்ளும் பகலும் மக்களின் நல்வாழ்விற்காக உழைத்த காலகட்டம் எல்லாம் காலாவதியாகி சென்றுவிட்டது. சமீப கால கட்டங்களில் அதிகாரிகள் பலரும் மக்கள் மீதான வன்முறைகளை தொடர்ந்து நிகழ்த்திவருவதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் நிர்வாக வளர்ச்சி என்ற பெயரில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க இயலாது.
அப்படி ஒரு சம்பவம் தற்போதும் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறையும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமனேரி முதல் சின்னத்திருப்பதி வரை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனனுக்கு சொந்தமான நிலத்தை தவிர்த்து இதரப் பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்தில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அர்ஜுனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே அப்போது அர்ஜுனன் திடீரென அங்கிருந்த பெண் ஒருவரை கன்னத்தில் ஆராய்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதாக அவர் மீது வழக்கு உள்ளது. அதனை தொடர்ந்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் பெண் ஒருவரை அவர் சாலையில் வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.