பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டாா். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தர் நிகழ்வு திருவள்ளூர் பொத்தூரியில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் நடைபெற்றது.
அங்கே அவரது முழு உருவ சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 9 அடி உயர முழு உருவ சிலை திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்டங்கின் மனைவி திருமதி. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் புதிய கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். அதற்கு தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்று பெயரிடப்பட்டு உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.