தமிழ்நாடு

”சமூக நீதிக்காக அச்சமின்றி போராடியவர்” வி.பி.சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இடஒதுக்கீடு நமது உரிமை என்று வலியுறுத்தி, சமூக நீதிக்காக அச்சமின்றி போராடியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் எனவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது சிந்தனைகள் ஒளிமயமான சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மை தொடர்ந்து வழிநடத்துட்டும் என்றும் முதலமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.