தமிழ்நாடு

”தனக்கும் இந்த விவகாரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” - சூரப்பா கடிதம்...!

Tamil Selvi Selvakumar

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்கள் தொடர்பாக, நேரில் ஆஜராக சூரப்பாவிற்கு அழைப்பு விடுத்து இருந்த நிலையில், தனக்கும் இந்த விவகாரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறு மதிப்பீட்டு மோசடி, சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குதல், ஆவணங்கள் அச்சடித்தல் உள்ளிட்ட விஷயங்களில் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. 

இந்நிலையில் இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக சூரப்பாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கும் இந்த முறைக்கேட்டிற்கும் சம்பந்தம் இல்லை என கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், இந்த முறைகேடு புகார்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தான் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தவை என்றும், தனக்கும் இந்த விவகாரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சூரப்பா தனது கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.