தமிழ்நாடு

கொரோனாவை காலி பண்ணிய 4 மாவட்டங்கள்...

ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் ராணிபேட்டை ஆகிய 4 மாவட்டங்கள்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது.
கடந்த ஜூலை 2ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், அதிகபட்சமாக கோவையில் 210 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக சென்னையில் 156 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாகவும், அதேப்போல், குறைந்தபட்சமாக தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2298 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.