தமிழ்நாடு

அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கொரானா தடுப்பூசி ?

அனைத்து தரப்பு மக்களுக்கும் மத்திய அரசு இலவசமாக கொரானா தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி தொகுதி எம்பி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கில்லியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று காலை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் எம்.பி.விஜய்வசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையால்  " அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரானா இலவச தடுப்பூசி போடும் முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். கொரானா தடுப்பூசியின் விலையை மத்திய அரசுக்கு 150 ரூபாய்,மாநில அரசுக்கு 300 ரூபாய், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என மூன்று விதமாக விலை நிர்ணயிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டு முடிய 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும் எனவே தினமும் ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.