தமிழ்நாடு

ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கபடுமா? - அமைச்சர் பதில்

Tamil Selvi Selvakumar

முன்னுரிமை அடிப்படையில் வால்பாறையில் ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், வால்பாறை தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்காக மட்டும் 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், வால்பாறையில் ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.