தமிழ்நாடு

” 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு “ - மின்சாரத்துறை அமைச்சர்

Malaimurasu Seithigal TV

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். 

செய்தியாளர் சந்திப்பு - அமைச்சர்:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையை பொறுத்தவரையில் 18 இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது , பின்னர் அவை சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த காலத்தில் இருந்த சூழல் :

நாகை மாவட்டம், திருவெண்காடு பகுதியில் மின் விநியோகம் 2 மணிநேரம் தடைபட்டது, தற்போது அவை இரவோடு இரவாக சரி செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரம் மழை பெய்தாலே மின் விநியோகத்தை நிறுத்தும் சூழல் கடந்த காலங்களில் இருந்தது , ஆனால் தற்போது முதலமைச்சரின் நடவடிக்கையால், பாதிப்பு ஏற்படாமல் மின் விநியோகம் நிறுத்தப்படகூடாது என்ற உத்தரவால், மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை என்றார்.

மின்வெட்டு புகார் இல்லை :

மேலும், 3700 க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தபட்டுள்ளதாகவும், வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்துள்ளதாகவும் மின்வெட்டு குறித்த புகார்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மின் தேவை குறைவு :

தொடர்ந்து பேசிய அவர், 11200 மெகாவாட் அளவுக்கு தான் நேற்று மின் தேவை ஏற்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் மின் தேவை குறைந்துள்ளது. கூடுதல் செலவு போன்ற காரணங்களால் அனல் மின் நிலைய உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது எனவும் 100 நாட்களுக்குள் 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். 

கவனம் தேவை :

இலவச மின்சாரத்திற்காக கடந்த 9048 கோடி மானியம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியம் அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனவும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.