தமிழ்நாடு

நண்பர்களுடன் காட்டுக்குள் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு.! ஒன்றும் தெரியாது என்ற நண்பர்கள்.! 

Malaimurasu Seithigal TV

வனப்பகுதியில் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க  சென்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இருக்கும் பள்ளபட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த நோபல் நேதாஜி(28) என்ற வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் 11 பேருடன் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்காமல் சிறுமலை அடிவாரம் மாவூர் அணை வனப்பகுதிக்குள் குளித்து கும்மாளமிட்ட சென்றுள்ளனர். 


இந்நிலையில் அணையிலிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவர்களில் நோபல் நேதாஜி மட்டும் வீடு திரும்பவில்லை இதனையடுத்து அம்மையநாயக்கனூர்  காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வனப்பகுதியில் சென்று தேடியபோது அங்கு நோபல் பிணமாக கிடந்துள்ளார். 

அதைத் தொடர்ந்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை  மீட்ட போலீஸார் மேலும் நடத்திய விசாரணையில் நண்பர்களுடன் சென்ற நோபல் நேதாஜி உடல் சோர்வால்  வனப் பகுதியில் தொடர்ந்து செல்ல முடியாமல்  பின்தங்கி விட்டதாகவும், அவர்களுடன்  தொடர்ந்து  வரவில்லை எனவும் கூறியதாக  கூறப்படுகிறது. 


இதைத் தொடர்ந்து நோபல் நேதாஜி யின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளிக்கவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மைய நாயக்கனூர் போலீசார். உடன் சென்ற நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.