சென்னை தலைமை செயலகத்தில் 300 அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜோசேப் விஜய். அப்போது 29A பெரம்பூர் செல்லக்கூடிய பேருந்தில் ஏறி பயணம் செய்தார். தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை பயணித்து விட்டு மீண்டும் தலைமை செயலகத்திற்கே வந்திறங்கினார்.
மேலும், 164 டீசல் பேருந்துகள், 136 CNG பேருந்துகளை முதலமைச்சர் கொடி அசைத்து துவங்கிவைத்தார். குறிப்பாக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், அரசு போக்குவரத்துக்கு கழகம் என்று எழுதி இருந்த நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது பதவியேற்றிருக்கும் இந்த புதிய அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று மாற்றியுள்ளது. மேலும் இந்த பேருந்துகள் இன்றைய தினமே பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரூ. 127.27 கோடி மதிப்பில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளானது சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், விழுப்புரம், கும்பகோணம் 7 வழித்தடங்களில் இயங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் பேருந்தில் பயணம் செய்தபோது, தனது செல்போனில் பயணம் செய்வதை வீடியோ எடுத்தவண்ணம் பயணம் செய்தார். வீடியோ எடுத்ததோடு மட்டுமின்றி அங்கிருந்த மக்களை நோக்கி கைகளையும் அசைத்தும் பயணம் மேற்கொண்டார் முதல்வர் ஜோசப் விஜய். தனது சொந்த தொடுஹிக்கு பயம் செய்த முதல்வர் விஜய், நடத்துநரிடமும் பேருந்து குறித்து கேட்டறிந்தார். இறுதியாக தலைமை செயலகத்திற்கு மீண்டும் வந்தார் முதலமைச்சர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.