vijay - karur 
தமிழ்நாடு

இனி விஜய் வாயே திறக்க முடியாது!?.. கட்சி அவ்ளோ தான்! - என்ன இப்படி சொல்லிட்டாரு!?

இந்தியாவின் பிரதான விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜக சார்புத்தன்மையை கொண்டுள்ளன என்பது....

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.  மேலும் இது குறித்து விசாரிக்க jk உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ -துவங்கியுள்ளது.

இந்த சூழலில் விஜய் மீண்டும் எப்போது பிரச்சாரத்திற்கு திரும்புவார்? கட்சியின் நிலைப்பாடு இதற்கு மேல் என்னவாக இருக்கும் என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் விஜய் -ன் அரசியல் செயல்பாடுகள் குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன், “விஜய் இனி ஒருபோதும் பாஜக -வை எதிர்த்து அரசியல் பேசவே முடியாது. ஏனெனில் ஆதவ் அர்ஜுனா எனும் அரசியல் புரோக்கர் தவெக -வை பாஜக -விடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டார். கரூர் சம்பவத்திற்கு பிறகும் கூட அவர்கள் திருந்தவே இல்லை. தவெக -வும் சரி அதன் தலைமையும் சரி நடந்த தவறுக்கு கொஞ்சம் கூட பொறுப்புணர்வு அற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு அமைத்த Sit - இந்த விவகாரம் குறித்து விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால் தற்போது சி.பி.ஐ இந்த வழக்கை இனி எப்படி கையாளும், எதனை ஆண்டுகளுக்கு வைத்திருக்கும் என்றே தெரியாது.

தவிர இந்தியாவின் பிரதான விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜக சார்புத்தன்மையை கொண்டுள்ளன என்பது நாடே அறிந்த விஷயம். பாஜக  இந்த சூழலை அவர்களுக்கு சாதகமாக  நிச்சயம் பயன்படுத்துவார்கள். காரணம் அவர்களின் ஒரே குறிக்கோள் தமிழகத்தில் கால்பதிப்பதுதான். அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இந்த துயர சம்பவம் நடந்த அன்றே முதல்கட்ட தலைவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்திருக்க வேண்டும். மேலும் விஜய் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார் அல்லவா, அதில் நடந்த துயரத்திற்கு வருத்தம் தெரிவித்து நிவாரணம் முதற்கொண்டு அனைத்து பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அது எதையுமே செய்யாமல் சினிமாத்தனமான பேச்சுகள் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.  அடுத்து வரும் காலங்களில் பாருங்களேன் அவர் எங்கேயும் எப்போதுமே ‘பாஜக - பாயசம் - பாசிசம்’ என்றெல்லாம் பேசவே முடியாது. ஒன்று தொண்டர்களை நெறிப்படுத்தி கட்சியை கட்டுக்கோப்போடு வைத்திருந்து அசம்பாவிதங்களை தடுத்திருக்க வேண்டும். இல்லையெனில், செய்த தவறிலிருந்து படம் கற்றிருக்க வேண்டும். இது எதையுமே செய்யாமல் இருப்பது அரசியல் தலைவருக்கு அழகல்ல. இனி கட்சி என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.