2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தீவிரமாக தற்போது எண்ணப்பட்டு வருகிறது. பல இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. திமுகவின் முக்கிய புள்ளிகளை தவெக வேட்பாளர்கள் தோற்கடித்துள்ள நிலையில் முன்னிலையை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டது திமுகவின் பின்னடைவை படமிட்டு காட்டியது.
மேலும், 107 தொகுதிகளில் தவெக முன்னிலையில் தற்போது இருந்து வருகிறது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் திருச்சி கிழக்கிலும், பெரம்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரம்பூர் தொகுதிக்கான வெற்றி சான்றிதழை வாங்க லயோலா கல்லூரிக்கு சென்றுள்ளார். தான் படித்த கல்லூரிக்கே சென்று தனது வெற்றி சான்றிதழை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருக்கு பாதுகாப்பளிக்க போலீசார் குவிக்கப்பட்டுருந்தனர். மேலும் விஜய்யை காண பல ரசிகர்கள் அங்கு திரண்டனர். சிரித்த முகத்தோடு வந்து தனது ரசிகர்களுக்கு கைகளை அசைத்துவிட்டு தனது வெற்றி சான்றிதழை வாங்கிக்கொண்டார். வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்களை பனையூர் அலுவலகத்தில் சந்திப்பதாக விஜய் கூறியிருந்த நிலையில் இதனை முடித்துவிட்டு பனையூர் அலுவலகம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தான் பெற்றுக்கொண்ட வெற்றி சான்றிதழை உயர்த்தி பிடித்தவாரே பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ அங்கிருந்து கிளம்பினார் விஜய்.
தனது பெற்றோரை சந்தித்து விட்டு அவர்களின் ஆசி பெற்று தனது வெற்றி சான்றிதழை பெற்றார் விஜய். தற்போது ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்படுவதால் விஜய் மற்ற கட்சியினரை கூட்டணிக்கு அழைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ராகுல் காந்தி விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை இளைஞர்களின் ஒருமித்த குரலாக பார்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது கூட்டணிக்காக யாரிடம் விஜய் பேச போகிறார்? இது குறித்து என்ன முடிவெடுப்பார்? என்று பலராலும் விவாதிக்கப்படும் ஒன்றாக பார்க்கப்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.