தமிழ்நாடு

ஊரடங்கில் மேலும் தளர்வுகள்,..11 மாவட்டங்களில் திறக்கப்படுகிறதா மதுக்கடைகள்.?

Malaimurasu Seithigal TV

ஊரடங்கில் மேலும் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி, அங்கு மதுக்கடைகளைத் திறக்க  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிறிய கோயில்கள், பெரிய கடைகள், ஜவுளி மற்றும் நகை கடைகள் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.