தமிழ்நாடு

ஜி ஸ்கொயர்...! 6 இடங்களில் வருமான வரி சோதனை நிறைவு...!!

Malaimurasu Seithigal TV

சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 21 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 6 இடங்களில் நிறைவு பெற்றுள்ளது.

ஜி ஸ்கொயருக்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் சேத்துபட்டில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகம்,  தேனாம்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகம், அமைந்தகரையில் உள்ள  கார்த்தி என்பவரது அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளதாக வருமான வரித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் தெருவில் அமைந்துள்ள சுபாஷ் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனையானது நிறைவடைந்துள்ளது.
இதே போல் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி ஸ்கொயர் நிர்வாகி ஸ்ரீப்ரியா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையும் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மீதமுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஹைதரபாத்தில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.