தமிழ்நாடு

பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு..!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.  விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை பலத்த போலீசார் பாதுகாப்புடன் சென்னை பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடலில் கரைத்தனர். 

சென்னை கொளத்தூரை அடுத்த ரெட்டேரி லட்சுமிபுரத்தில் இந்து முன்னணி சார்பாக 64 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து  பட்டினப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து  சிலைகள் அனைத்தும் தனித்தனியாக டிராக்டர், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக  இசை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஏரியில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில்  விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இந்து தெய்வங்கள் வேடமணிந்த சிறுவர்கள் வந்த நிகழ்வு காண்போரை பரவசமடைய செய்தது. இதனை தொடர்ந்து  குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.