தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் இன்று மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மராத்தன் போட்டியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் போட்டது தவிர்க்கப்பட வேண்டியது மாணவர்களை நல்வழிப்படுத்த கூடிய வகையில் அமைச்சரின் செயல்பாடு இருக்க வேண்டும்” என்றும் “அமைச்சர் ஒரு குழந்தையின் காலை தடவுவதும் சொடக்கு எடுப்பது போன்ற அவர் செயல் அருவருக்கத்தக்கது அனுமதிக்க முடியாது” என்றும் அமைச்சர் விஸ்வநாதன் செயலுக்கு கண்டன குரல் எழுப்பினார். மேலும் இது போல் தொடுவதுமே போக்சோ சட்டப்படி குற்றம் தான் எனவே அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது ஒரு கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ஒரு பெண் ஆசிரியை மூலம் அந்த மாணவிக்கு உதவி செய்திருக்கலாம்” என்றும் “அந்த வீடியோவை பார்த்தால் அமைச்சரின் செயலால் அந்த மாணவியின் தயக்கம் அசொளகரியம் தெரிகிறது” என்றும் தெரிவித்தார். மேலும் இது போன்ற செயல்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“இன்னொரு வீடியோ வந்துள்ளது அதில் அமைச்சர் ஒருவர் மாத்திரையை நொறுக்கி கொடுத்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். மாத்திரையை ஏடிஎம் காரை வைத்து நொறுக்கி டெமோ காட்ட சொல்லுங்க அவரை.. என்ன விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதற்கு ஹெட்டிங் போட்டுள்ளார்கள் ‘தக் லைப்’ என்று தக் லைப் எதற்காக போடுகிறார்கள் என்றால் யாராலும் செய்ய முடியாத செயல் நான் ஒரு தில்லானா ஆள் அப்படி என்பது போல் தான் அந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். இன்றைக்கு அவர் சொல்கிறார் என்னுடைய குழந்தைக்கு மாத்திரை கொடுக்க அப்படி செய்தேன் என்று ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு யாருக்குமே மாத்திரை வழங்குவது கிடையாது. சிரப் தான் கொடுப்பார்கள் அந்த வீடியோவை பார்த்தால் தெரியும் எங்கேயுமே மாத்திரை தெரியவில்லை குழந்தை தெரியவில்லை சரத்குமாரின் முகத்தில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்ற வருத்தமோ கவலையோ தெரியவில்லை எனவே அவர் ஒரு பொய்யான அறிக்கையை சொல்கிறார். இன்னொரு முறை வேண்டுமானால் அவர் தன்னை நிரூபிக்கலாம் மருத்துவ பரிசோதனை மூலம் நான் எந்த போதை மருந்தையும் எடுக்கவில்லை என்பதை அவர் நிரூபிக்கலாம். போதை தடுப்பு படை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறினார். ஆனால் இதுவரை போதை தடுப்பு படை அமைக்கப்படவில்லை அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்’’ என்றும் கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ரமணா நியமனம் செய்ததை குறித்து பேசிய கீதா ஜீவன், “மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாக இருந்து செயல்படக்கூடிய ஒரு பதவியை கர்நாடகாவை சேர்ந்தவரை எப்படி போடுவீர்கள்? அவர் காவிரி பிரச்சனையில் யாருக்கு சப்போர்ட் செய்வார்? என்று கேள்விகளை அடுக்கினார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்று கூறுகிறார். அவர் சொல்வது ஒன்று செய்வது. அதே போன்று தான் விவசாயிகள் நிலைமையும்.. டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள் கடனை முழுவதுமாக தள்ளுபடி பண்ணவில்லை ஜூன் 12 காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை கரண்டும் வரவில்லை போராட்டத்தை தூண்டுவது எதிர்க்கட்சி தான் என தமிழக முதல்வர் கூறுகிறார். அமைச்சர் என்ன சொல்கிறார் விவசாயத்தை விட விளையாட்டு துறை மேலானது என்கிறார்கள்” என்று முதல்வர் விஜயின் சட்டமன்ற பேச்சுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது பொய்யான தகவல் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் தூரம் ஓடி இருக்கிறார். சீன் போட வேண்டும் ரீல்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக மைக்கில் எதையாவது பேசி வருகிறார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் அறிவார்கள் தமிழ்நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற வினாவோடு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வருவாய்த்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி பெயர் இருக்கும் என்று அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது, என்று அமைச்சர் செங்கோட்டையன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.