"எனக்கு அந்த படம் எடுக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.. ரிலீஸ் அன்று காட்சிகளை நீக்க வச்சாங்க" - ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் புதிய திருப்பம் AI Genrated
தமிழ்நாடு

"எனக்கு அந்த படம் எடுக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.. ரிலீஸ் அன்று காட்சிகளை நீக்க வச்சாங்க" - ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்

இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த அன்றைய அமைச்சர்கள், தேவைபட்டால் முன்னாள் முதல்வர்களையே விசாரணை வளையத்திற்குள் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் கைது செய்து கேவலமாக தண்டிக்கப்பட வேண்டும்.

மாலை முரசு செய்தி குழு

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எப்ஸ்டீன் ஃபைல்ஸின் பாலியல் குற்ற வரலாற்றுக்கு சற்றும் குறையாத வகையில், தமிழகத்தில் வெடித்துள்ளது ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு.

சிறுமிகள் பலர் குறிவைத்து கடத்தப்பட்டு அல்லது மூளைச்சலவை செய்யப்பட்டு, வீரமணி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கொடூரம் தொடர்ந்துள்ளது. இதில் அரசு அதிகாரிகளுக்கும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் முக்கியஸ்தர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம் பெண்கள் சமூக வலைதளங்கள், செல்போன் மற்றும் ஆன்லைன் தொடர்புகள் மூலம் பாலியல் சுரண்டல் வலையில் சிக்குவது குறித்து, 'பகாசூரன்' திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி, இந்தச் சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "பகாசூரன் திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்க நான் பலரை சந்தித்து பல தகவல்களை சேகரித்தேன். தன்னை மக்களுக்கு மத்தியில் செல்வந்தராக, தொழிலதிபராக, கல்வி தந்தையாக காட்டி கொள்ளும் சிலரின் கோர முகங்கள் அறிய முடிந்தது.

திரைப்படம் வெளியான அன்று கூட சில காட்சிகளை நீக்க எனக்கு நெருக்கமான சில அரசியல்வாதிகளை வைத்தே சிலவற்றை நீக்க கோரிக்கை வைத்தார்கள்.. வெற்றியும் பெற்றார்கள் அதில்.. காத்திருக்கிறேன் அந்த முகங்கள் மக்கள் மத்தியில் கிழியும் நாள் வரும் வரை..

அப்படிபட்ட கேவலமான ஒருவன் தான் இவன்.. ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் பெரிய பெரிய மனித மிருகங்கள் உடன் இருக்க கூடும்.. தன்னை காத்து கொள்ள எந்த நிலைக்கும் செல்வார்கள்.. அவர்களையும் கைது செய்ய வேண்டும்..

மேலும் இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த அன்றைய அமைச்சர்கள், தேவைபட்டால் முன்னாள் முதல்வர்களையே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரையும் கைது செய்து கேவலமாக தண்டிக்க வேண்டும். அப்பன் ஈசனை வேண்டி கொள்கிறேன்.." எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மோகன் ஜி-க்கு அழுத்தம் கொடுத்தது எந்த அரசியல் தலைவர்? யாருடைய அழுத்தத்தால் காட்சிகள் நீக்கப்பட்டது என கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக முன்னாள் முதல்வர்களையே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என அவர் சொல்வதன் நோக்கம் என்ன என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்