'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கில்.. மிக முக்கிய "ஆளுமையின்" மகனுக்கு நோட்டீஸ் - யார் இந்த "கண்ணையா"? 
தமிழ்நாடு

'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கில்.. மிக முக்கிய "ஆளுமையின்" மகனுக்கு நோட்டீஸ் - யார் இந்த "கண்ணையா"?

கணேசன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீரமணியிடம் பணியாற்றியுள்ளார். இவரிடம் விசாரணை நடத்தியபோது ஒரு சிறுமியுடன் வீரமணி ஆபாசமாக நடந்துகொள்ளும் வீடியோ இவரது மொபைலில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பெரும் பணக்காரருமான வீரமணி, நீண்ட காலமாக குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு வந்தது அம்பலாமாகியிருக்கிறது.

இந்த கொடூர குற்றத்தின் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள், பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கலாம் எனப் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவருடைய கணவரும் ஜெம் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான மகேந்திர சிம்ஹம் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கடந்த 29.08.2026ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர் என்பதால், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுமிகளின் பாலியல் வீடியோக்களை வைத்திருந்ததாக வீரமணியிடம் பணியாற்றிய கணேசன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேசன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீரமணியிடம் பணியாற்றியுள்ளார். இவரிடம் விசாரணை நடத்தியபோது ஒரு சிறுமியுடன் வீரமணி ஆபாசமாக நடந்துகொள்ளும் வீடியோ இவரது மொபைலில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மொபைலில் சிறுமியின் வீடியோவை வைத்திருந்தது, அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காதது என்ற அடைப்படையில் கணேசன் கைது செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை நீரத்துப்போக வைக்க அவர்தான் பல அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரமணி, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஊட்டியில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்து ரூ.70 கோடியை போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கணேசனின் நண்பனும் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகனுமான பிரகாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கண்ணையா கடந்த 2024 ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர். அப்போதைய ஆளும் கட்சியான திமுகவுக்கு நெருக்கமாக இருந்தவர் என்றும் செய்தி அறிக்கைகள் சொல்கின்றன. வியாசார்பாடியை சேர்ந்த இவரது மகனுக்குதான் விபச்சார தடுப்பு பிரிவு காவலர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிரகாஷ் தற்போது நாட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. அவர் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றாரா அல்லது வேறு காரணமாக வெளிநாட்டில் இருக்கிறாரா என்பது தெளிவாகவில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்