தமிழ்நாடு

சைக்கிளிலேயே ரோந்துப் பணியில் ஈடுபட்ட தலைமைக்காவலர்... விபத்தில் காயமடைந்தவருக்கு காவல் ஆணையர் கொடுத்த பரிசு...

விபத்தில் காயமடைந்த தலைமை காவலரை நேரில் சந்தித்த சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் - சைக்கிளை பரிசாக வழங்கினார்.

Malaimurasu Seithigal TV

விபத்தில் காயமடைந்த சென்னை தேனாம்பேட்டை தலைமைக் காவலர் செந்தில்குமாரை, மாநக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சைக்கிளிலேயே ரோந்துப் பணியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்ட செந்தில்குமார், நேற்று விபத்தில் சிக்கினார். 

இதில் அவருக்கு தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன் சைக்கிளும் சேதமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

இதையடுத்து சங்கர் ஜிவால் அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். சங்கர் ஜிவாலைக் கண்டதும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்து போயினர். அவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடிய சங்கர் ஜிவால், அவருக்கு ஒரு சைக்கிளையும் பரிசாக வழங்கினார்.