தமிழ்நாடு

“அது எப்படி திமிங்கலம்” - ஒரே பள்ளியில் தேர்வு எழுதிய 156 மாணவர்கள்.. ஒரே பாடத்தில் எடுத்த 100 மதிப்பெண்கள்.. இது எப்படி சாத்தியம்!

உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 156 பேர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்

Mahalakshmi Somasundaram

இந்த ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கி இருபத்தி ஐந்தாம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் இந்த மாதம் 8 தேதி வெளியானது.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 156 பேர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி நடைபெற்ற வேதியியல் பாட தேர்வில் செஞ்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில். அரசு பள்ளியை சேர்ந்த 414 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 65 மாணவர்கள் வேதியியல் பாடப்பிரிவில் 100க்கு 100 மதிப்பெண்களையும், 45 மாணவர்கள் 100க்கு 99 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

மேலும் செஞ்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை சென்டராக கொண்டு தேர்வு எழுதிய தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களையும், 25 மாணவர்கள் 100க்கு 99 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்ட போது பள்ளியில் பணியில் இருந்த கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்தி எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார் என்றும், மேலும் பள்ளியில் வினாத்தாள் எதுவும் கசியவில்லை மற்றும் முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வேதியியல் தேர்வு நடந்த அன்று செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு மையத்தை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் குழந்தைராஜன் மேற்பார்வையிட்டார். எந்த ஒரு முறைகேடு நடைபெறவில்லை என கூறியிருந்தார்.

இந்த ஆண்டு வேதியியல் தேர்வின் வினாத்தாள் 80% சுலபமாக வந்திருந்தாலும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 156 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை எடுப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. எனவே இதை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்