தமிழ்நாடு

''அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை வழங்கிடுக'' - மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை..!

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடியில் அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டுமென மாற்று திறனாளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அதில்,  காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்று திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அரசாணை 151-ன் படி நிரந்தர வேலை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைகளையும் ARF மற்றும் PHH குடும்ப அட்டையாக மாற்றிதர கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் அளித்த கோரிக்கை மனுவின் விபரம் பின்வருமாறு:- 

அரசுபணிகளில் 1 சதவீத இட ஒதுக்கீடை முறையாக வழங்கவேண்டும் என்று காது கேளாத-வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழ்நாடு காது மற்றும் வாய்பேசாதோர் உரிமைகளுக்கான சங்கத்தின்  நிர்வாகிகள்ஆட்சியர்அலுவலகத்தில்அளித்துள்ளமனுவில், "காது கேளாதோர் வாய்பேசாதோர் புரிந்துகொள்ள கூடிய வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறைஅலுவலகம், தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். 

மாநிலமுழுவதும் காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களை அரசாணை எண் 151-னின் படி உடனடியாக நிரந்தர பணியில் அமர்த்தவேண்டும். மற்றும், அரசுபணிகளில் 1% இடஒதுக்கீடை முறையாக வழங்க வேண்டும். தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காதுகளாத மற்றும் வாய் பேசாத குடும்பங்களை சார்ந்த அனைத்து குடும்ப அட்டைகளையும்  ARF மற்றும் PHH குடும்ப அட்டைகளாக மாற்றிதரப்பட வேண்டும். அதோடு, மாநில முழுவதும் அரசு இலவச வீட்டுமனை உடனே வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.