தமிழ்நாடு

துபாயிலிருந்து கடத்தி வந்த ரூ.51.36 லட்சம் மதிப்புடைய தங்கம் .... உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்த பயணி

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.51.36 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் வந்த 117 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த சென்னையை சோ்ந்த 28 வயதான ஆண் பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவருடைய உடமைகளில் எதுவும் இல்லை.ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனை செய்தனர்.

அதில் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக்கவரிலான 3 பாா்சல்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. .அந்த பாா்சல்களில் தங்க பசை இருந்ததை கண்டுப்பிடித்தனா். மொத்தம் 1.055 கிலோ தங்கப்பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.51.36 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் சென்னை பயணியை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.