தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்! தமிழக அரசு அரசாணை வெளியீடு!...

அரசு ஊழியர்கள் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை இனி வரும் காலங்களில் தமிழில் தான் எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் என அனைவரும் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை தமிழில் எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சிதுறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலின் போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு ஊழியர்களான அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என குறிபிட்டதை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த வகையான அரசாணைகள் 1978 மற்றும் 1998 ல் இது குறித்து வெளியிடப்பட்ட முந்திய அரசாணைகளயும் , 1997 ல் அரசாங்கம் வெளியிட்ட கடிதத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளின் வருகை மற்றும் சேர்க்கை விண்ணப்பம், அதனுடன் மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவர்கள் தங்கள் பெயரை எழுதும் போது தமிழில் இன்ஷியல் மற்றும் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசுத் துறைகளின் அனைத்து உத்தரவுகளிலும் பெயர்கள் மற்றும் முதல் எழுத்துக்கள் குறிப்பிடும் போதெல்லாம் அவை தமிழில் இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் என அனைவரும் அரசு சம்மந்தப்பட்ட படிவங்களை பதிவு செய்யும் போது பெயர்களை தமிழில் எழுதவும் அறிவித்துள்ளது.

இந்த அரசாணை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுமாறு அரசாணை வலியுறுத்தியுள்ளது. மேலும் அரசாணை கடிதம் திறம்பட பின்பற்றப்படவில்லை எனவும் இதனை மீறுவோரின் தண்டனைகள் பற்றிய தகவல்கள் குறிபிடப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.