ஆற்றில் குதித்து தற்கொலை.. அரசு மருத்துவர் எடுத்த விபரீத முடிவு - விசாரணையைத் தொடங்கிய காவலர்கள்!  
தமிழ்நாடு

ஆற்றில் குதித்து தற்கொலை.. அரசு மருத்துவர் எடுத்த விபரீத முடிவு - விசாரணையைத் தொடங்கிய காவலர்கள்!

முதற்கட்ட விசாரணையில் அவரை அடையாளம் கண்டுள்ள காவலர்கள், திருக்கோவிலூர் பகுதியில்வாடகைக்கு வீட்டில் வசித்து வந்ததாக கண்டறிந்துள்ளனர்.

Antony Ajay R

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த சரண்யா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே டி.தேவனூர் எல்லைப் பகுதியில் செல்லும் ‌ துரிஞ்சலாற்றில் இரும்பு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அவரை அடையாளம் கண்டுள்ள காவலர்கள், திருக்கோவிலூர் பகுதியில்வாடகைக்கு வீட்டில் வசித்து வந்ததாக கண்டறிந்துள்ளனர்.

தற்கொலை காரணம் குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை.