ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்துநிலையங்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.