தமிழ்நாடு

சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசு!

Tamil Selvi Selvakumar

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக அரசு, அத்துறைக்கான நிதியை கடந்த ஆண்டை விட 49 சதவீதம் அதிகரித்து ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதத்தில், ஜுன் 27ம் தேதி பன்னாட்டு சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவன நாளாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நலிவுற்றிருந்த நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில், கடந்த ஆண்டை விட 911 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கியதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.