தமிழ்நாடு

தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும்...ரூ. 2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றம்!

Tamil Selvi Selvakumar

சென்னையை அடுத்த ஒரகடத்தில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களை 4.0 தரத்திலான நவீன தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு கையெழுத்தானது. அந்த வகையில், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், மென்பொருட்கள் ஆகியவை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், ஒரகடத்தில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன்மூலம் ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோ மேஷன், மேனு பேக்சரிங் பிராசஸ் கண்ட் ரோல், அட்வான்ஸ்டு மேனு பேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், உள்ளிட்ட நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.