தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் கோரிக்கை - நிறைவேற்றுமா அரசு ?

எங்களது கோரிக்கைகளை அமைச்சர்களிடம் முன் வைத்துள்ளோம், நிறைவேற்றி தருவார்கள் என்று நம்புகிறோம்.

Anbarasan

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கத்தின் சார்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு பேச்சு வார்த்தையில் அவர்களது கோரிக்கையை முன்வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் பச்சையப்பன், செய்தியாளர்களை சந்தித்தார்..

அமைச்சர்களிடம் எங்களது கோரிக்கைகளை வைத்துள்ளோம் அமைச்சர்கள் நிறைவேற்றி தருவதாக தெரிவித்துள்ளார்கள்.

2009 ஆம் ஆண்டு வழங்க வேண்டிய தர ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துதல் ,

தலைமைச் செயலகத்தில் உள்ளது போல படித்த தகுதி உள்ள ஓட்டுநர்களுக்கு ஓட்டுனர் நிலையிலிருந்து உதவியாளர் நிலைக்கு பதவி உயர்வு வழங்குதல்

10 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த ஓட்டுனர்களுக்கு தற்போது தமிழக அரசால் ஊக்க தொகையாக 500 வழங்கப்படுகின்றது, இவற்றினை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடுதல்

15 வருட பழைய வாகனங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்களிடம் முன் வைத்துள்ளோம் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளது.